சுவை கொல்பவர்களுக்கு 7ஆண்டு சிறைதண்டனை தரும் வகையில் பசு வதை தடை சட்டத்தை குஜராத் அரசு திருத்தியுள்ளது இதற்கான மசோதா, சட்ட சபையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றபட்டது.

பசுவதை தடை சட்டம் குஜராத்தில் ஏற்க்கனவே அமலில் இருக்கிறது . இதன்படி, பசுவை கொல்பவர்களுக்கு 6மாத சிறைதண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கபட்டு வந்தது.

இந்தசட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை இதை தொடர்ந்து கால்நடை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவுசெய்தது.

இதற்கான திருத்த_மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யபட்டது. முக்கிய எதிர்கட்சியான காங்கிரசும் மசோதாவுக்கு ஆதரவு தந்தது எனவே எந்த எதிர்ப்பும் இன்றி இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றபட்டது.

புதிய சட்டப்படி, பசுவை கொல்பவர்களுகு 7ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கபடும்.

Leave a Reply