அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணவீக்க விகிதம் 7 சதவீதமாக குறையும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் நம்பிக்கை தெரிவித்தார். பருவமழை நிலவரம் நன்றாக உள்ளதால் வேளாண் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உணவு தானியங்கள் விலை குறைந்து பணவீக்கம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் வங்கித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரங்கராஜன், அடுத்த ஆண்டிலும் பருவமழை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் பணவீக்க விகிதம் 6 சதவீத அளவிற்கு வந்து விடும் என்றும் கூறினார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பணவீக்கம் இரட்டை இலக்க அளவில் இருந்து வருகிறது. சர்வதேச அளவில் விளைபொருள்கள் விலை உயர்ந்ததே இதற்கு காரணம் என்றும், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிந்தது காரணமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். நடப்பு ஆண்டு, ஜனவரி மாதத்தில் காய்கறிகள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருந்தது. இந்நிலையில் பருவமழை நன்றாக உள்ளதால் வரும் 2012-ஆம் ஆண்டின் ஜனவரி-மார்ச் மாத காலத்தில் காய்கறிகள் விலை குறைந்து, உணவு பணவீக்கம் குறையும் என்று மேலும் அவர் கூறினார்.

Tags:

Leave a Reply