கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு பணிகள் தொடங்கின . 900 க்கும் அதிகமான ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பினர்.

அணு மின் நிலையத்தை இயக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளதை தொடர்ந்து அங்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதை தடுக்க தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம்,

மதுரை,சிவகங்கை,கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த 10,000 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

அணு மின் நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து 96 ரஷ்ய_விஞ்ஞானிகள் உள்பட 950 ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். அவர்கள் இரண்டு பேருந்துகள் மற்றும் கார்களில்_பலத்த பாதுகாப்புடன் அணு மின் நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

Leave a Reply