ஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சிக்கு  ரூ.71.73 லட்சம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் சுரேஷ் கல்மாடியின் திடீர் விருப்பத்தின்பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சிக்கு ரூ.71.73 லட்சம் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தியதில் பலகோடி ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் திங்கள் கிழமை குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டது. அப்போது, நிறைவு விழாவில் ஒருங்கிணைப்புக்குழு முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியின் திடீர்விருப்பத்தின் பேரில், நடிகை ஷில்பாஷெட்டியின் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் இதற்காக ரூ. 71,73,950 அளிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அது சரி தேசத்தின் மானத்தை காக்க அல்லும் பகலும் பயிற்சி எடுத்து அதில் கலந்து கொண்ட வீரர்களுக்கு எத்தனை லட்சம் தந்தார்களாம்.

Leave a Reply