இந்தியாவின் அனைத்து கிராமங்க ளையும் இன்டெர்நெட் வசதிகளை ஏற்படுத்த அடுத்த மூன்று ஆண்டுகளில் 750,000 கிமீ கேபிள் பயன் படுத்தப்பட உள்ளதாக மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக இத்திட்டம் மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரத்தை வழங்க வழி வகுக்கும் என்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பங்கேற்ற 20 பேரை கவுரவிக்கவும் நிகழ்ச்சியில் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்தார். மேலும் தொழில் நுட்பத்தின் சகதி குறித்து நாட்டுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்சமயம் 300 மில்லியன் இன்டெர்நெட் பயனாளிகள் இருப்பதோடு விரைவில் அமெரிக்காவை முந்தி உலகளவில் இன்டெர்நெட் பயன்படு படுத்துவோர் எண்னிக்கையில் இரண்டாம் இடம்பிடிப்போம் என்றும் மின்சாதன உற்பத்தியிலும் அதிக கவனம் செலுத்தப் படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply