இலங்கையால் கைதுசெய்யப்பட்ட 78 இந்திய மீனவர்களையும் உடனே விடுதலைசெய்ய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனிடையே சென்னை சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை இந்திய அரசு விடுதலைசெய்தது. இந்த நிலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது: 13 இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டுக்குழு கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள 78 இந்திய மீனவர்களை விடுதலைசெய்ய உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் எஞ்சிய இலங்கை மீனவர்கள் அனைவரையும் இந்தியாவும் விரைவில் விடுதலைசெய்யும் என்று எதிர்பார்க்கிறேன். என்று ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply