நம் நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்த 78.50 சதவீத சாலை விபத்துகளுக்கு ஓட்டுனர்களே காரணம் என தெரியவந்துள்ளது.

மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளி யிட்டுள்ள ‘இந்தியாவில் சாலை விபத்து’ என்னும் பெயரில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை யின்படி, நம் நாட்டில் நடக்கும்

சாலை விபத்துக்களுக்கு பாதசாரிகள் (2.20 %), சைக்கிள் ஓட்டுபவர்கள் (1.20 %), மோசமான சாலைகள் (1.30 %), பழுதடைந்த வாகனங்கள் (1.80 %), மோசமான வானிலை (0.82 %) போன்றவையும் பிற காரணங்கள் (14.20 %) எனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சாலை விபத்து குறித்த இந்த ஆய்வு மத்திய, மாநில மற்றும் ïனியன் பிரதேச அரசுகளின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், சாலை பாதுகாப்பு விதி முறைகள் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து தணிக்கை செய்யப்பட்டு ஐ நா அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply