ஜம்மு காஷ்மீரில் சாலைகள் அமைக்க ரூ 8 ஆயிரம்கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் படும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார் .

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கும்போது, ஜம்மு காஷ்மீர் முதல்மந்திரி உமர் அப்துல்லா தொடர்ச்சியா இந்த விவகாரங்களை எழுப்பிவந்தார். இந்நிலையில், பிரதமர் இன்று ஒரு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்திற்கு 8 ஆயிரம்கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தில் முக்கியமான நான்குசாலைகள் அமைக்க தேவைப்படும் 8 ஆயிரம்கோடி நிதியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடுசெய்ய உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply