பிரதமர் நரேந்திர மோடி, வரும் 18ம்தேதி வாரணாசி செல்ல உள்ளார். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளம் அவர் அன்று இரவே, டில்லி திரும் புகிறார். டில்லி திரும்பும் போது, வாரணாசி முதல் பபாட்பூர் ஏர்போர்ட் வரையிலான 20 கிலோ மீட்டர் தூரத்தை, பிரதமர் மோடி, சாலை வழியாக கடக்க உள்ளார்.

இதற்காக, அம்மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, லோக் சபா தேர்தலில் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் நி்ன்று வெற்றிபெற்றார். பின், வதோதரா தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply