பாஜக சார்பில் போட்டியிடும் 8 பேரில் 6 பேரின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது. பாஜக தனது 6வது வேட்பாளர் பட்டியலை நேற்றுவெளியிட்டது. இதில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பாஜக மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் போட்டியிடுகிறார்.

தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான இல.கணேசன் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் போட்டியிடுகிறார்.

சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா போட்டியிடுகிறார்.

நீலகிரி தனித் தொகுதியில் எஸ்.குருமூர்த்தி போட்டியிடுகிறார்.

ராமநாதபுரத்தில் குப்புராமு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags:

Leave a Reply