ம.பி, முதல்வர் சிவராஜ் சிங் செளகான் 8 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ம.பி, முதல்வர் சிவராஜ் சிங் செளகான் 8 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார்.அங்கு அவர், உலக வங்கி அதிகாரிகளையும் , சர்வதேச நிதிநிறுவன பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார். சந்திப்பின் போது, கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர், சமூக பாதுகாப்பு, நகர்ப்புற மற்றும் ஊரக மேம்பாட்டு வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிக்க இருக்கிறார் .

ஸ்டான் ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ஹுவர் கல்வி நிறுவனத்தில் “பெண்களுக்கு தருதல் மற்றும் சமூகபொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு’ குறித்து உரையாற்றுகிறார். மத்தியப் பிரதேசத்தில் முதலீடுசெய்வது குறித்து அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளார். சிகாகோவில் இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்ட பத்துக்கு செல்லவுள்ளார். பின்னர் அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவுக்குத் திரும்புகிறார்

Leave a Reply