மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் 80-ல் 40 தொகுதிகளில் வெற்றிபெறத் பாஜக திட்டமிட்டுள்ளது. தற்போது பத்துதொகுதிகளை வைத்திருக்கும் பா.ஜ.க, கடந்த 2009 தேர்தலில் சுமார் ஆறு தொகுதிகளில் முப்பதாயிரம் மற்றும் நான்கு தொகுதிகளில் ஐம்பதாயிரம் வாக்குகளில் தோல்விகண்டது.

இத்தனைக்கும் 18.25 சதவிகித வாக்குகள்பெற்ற காங்கிரசை விட பா.ஜ.க.,விற்கு 1.25 மட்டுமே குறைவாகக் கிடைத்தது. காங்கிரஸ் பாஜக.,வை விட இரண்டுமடங்கிற்கும் அதிகமாக 21 தொகுதிகளில் வெற்றிபெற்று விட்டது.

அதேபோல், உபியில் உள்ள ரிசர்வ்தொகுதிகள் 17. இதில், ஆக்ரா மற்றும் பன்ஸ்காவ்ன் ஆகிய இருதொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. எனினும், மீதம் உள்ள 15 தொகுதிகளில் இரண்டு முதல் மூன்றுமடங்கு வாக்குகள் எண்ணிக்கை கடந்த தேர்தல்களைவிட அதிகமாக கிடைத்திருக்கிறது. இது, அந்த ரிசர்வ்தொகுதிகளில் பாஜக.,வின் அதிவேகமான வளர்ச்சியை காட்டுகிறது.

இதுகுறித்து தி இந்துவிடம் பேசிய பா.ஜ.க.,வின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘ரிசர்வ் தொகுதிகளின் தலித் வாக்காளர்களை குறிவைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதன் மூலம், குறைந்தது 11 சீட்டுகளை பெறுவோம். ஏற்கனவே, வென்ற பத்தையும் தக்கவைத்து கொள்வது பெரியகாரியமல்ல. ஏனெனில், 2004ல் கூட அந்த பத்து எங்களிடம் தான் இருந்தது.’ எனக் கூறுகின்றனர்.

இந்த 21 தொகுதிகளையும் சேர்த்து 2009ல் இரண்டாம் நிலைபெற்ற 11 தொகுதிகளுடன் 32-ஐ எளிதாக பெறமுடியும் எனவும், பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடியின் அலைக்கு எட்டு சேர்த்தால் 40 தொகுதிகள் பாஜகவிற்கு உறுதி எனவும் அரசியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply