8 ஆயிரம் கி.மீ,.க்கு அப்பால் இருக்கும் இலக்கை தாக்கும் ஏவுகணையை தயாரிகும் திறன் இந்தியாவிடம் இருப்பதாக டி.ஆர்.டி.ஓ. வின் இயக்குநர் ஜெனரல் விகே.சாரஸ்வத் கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; அக்னி-5 ஏவுகணை 5000கி.மீ. தொலைவில் இருக்கும் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது . இதை தவிர 8000 கி.மீ.க்கும் அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் ஏவுகணைக்கான தேவை இருந்தால் அதையும் நம்மால் தயாரிக்க முடியும் . டி.ஆர்.டி.ஓ. அதற்கான பணிகளை துவக்கியுள்ளது. இதுபோன்ற ஏவுகணைகளை தயாரிக்கும் திறமை இந்தியாவிடம் உள்ளது இருப்பினும் பணிகள் எப்போது நிறைவுபெறும் என கால அவகாசம் நிர்ணயிக்க படவில்‌லை. என்றார்‌.

Leave a Reply