ரூ.80,000 கோடி மதிப்பகொண்ட பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது இதில் ரூ.50,000 கோடி மதிப்புள்ள 6 நீர் மூழ்கிக் கப்பல்களை இந்தியா விலேயே தயாரிக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

மேலும் பீரங்கியை தாக்கும் இஸ்ரேலிய ஏவுகணைகள் 8,000, மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பாடு செய்யப்பட்ட டோர்னியர் கண் காணிப்பு விமானங்கள் 12 ஆகியவற்றை வாங்கவும் இந்தத்திட்டத்தின் கீழ் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர், மேலும் பலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக இந்திய கப்பற்படையின் மேம்பாடுகள் முக்கியத்துவம் பெற்றன. முக்கியமாக, இந்தியாவிலேயே 6 நீர் மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க எடுக்கப்பட்ட முடிவு பெரியதாக கருதப்படுகிறது.

அடுத்ததாக, 8,356 பீரங்கித்தாக்குதல் ஏவுகணைகளை ரூ.3,200 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவெடுக்கப்பட்டது. யுஎஸ். ஜாவ்லின் ஏவுகணைக்கு பதிலாக இஸ்ரேல் ஏவுகணைகளை வாங்க முடிவெடுக்கப் பட்டது. மேலும் ஏவுகணைகளை செலுத்தும் 321 லாஞ்சர்ஸ் களையும் வாங்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

எச்ஏஎல். நிறுவனத்திடமிருந்து ரூ.1,850 கோடி மதிப்புள்ள டோர்னியர் உயர்தொழில்நுட்ப கண் காணிப்பு விமானங்களை வாங்கவும் முக்கியமுடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

362 இன்ஃபாண்ட்ரி போர் வாகனங்களை மேடக்கில் உள்ள துப்பாக்கி தொழிற் சலையிலிருந்து வாங்க ரூ.662 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கப்பற்படையில் தற்போது 13 நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்ளன. 1999-ஆம் ஆண்டு வாஜ்பாய ஆட்சி காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி 2030ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 30-ஆக உயர்த்தப்பட வேண்டும்என்ற நோக்கத்துடன் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டவர் களிடையே அருண்ஜேட்லி பேசும்போது, " தேசப் பாதுகாப்பே இந்த அரசின் பிரதானம், இந்தத்திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளையும் சிக்கல்களையும் அடையாளம் கண்டு அவற்றை தீர்ப்பது அவசியம்." என்றார்.

நீர்மூழ்கிக் கப்பல் களை இந்தியாவிலேயே தயாரிக்கும் புதியமுயற்சிக்கு இங்கு இருக்கும் திறனுள்ள துறைமுகங்களை அடையாளம்காண சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் இந்தக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குவந்த 6 மாதங்களுக்குள் ராணுவத்துக்கு ரூ.1 லட்சத்து 20 கோடி மதிப்புள்ள தளவாடங்களை கொள்முதல்செய்ய ஒப்புதல் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Leave a Reply