மேற்கு ஐரோப்பாவை சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் சுமார் 80,000 பேர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார சிக்கலில் தவித்து வரும் ஐரோப்பிய மக்கள் சிக்கன

நடவடிக்கை காரணமாக தொலை தூர கார் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். எனவே, கார்களுக்கான தேவை கணிசமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் வோக்ஸ் வேகன், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ஓபல், பி.எஸ்.ஏ. பீகாட், சிட்ரியான், ரெனால்ட் மற்றும் ஃபியட் உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்கள் குறைந்த உற்பத்தி திறனிலேயே இயங்கி வருகின்றன. இதனால், இந்நிறுவனங்களுக்கு சொந்தமான 5 முதல் 10 தொழிற்சாலைகள் அடுத்த 2-3 ஆண்டுகளில் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், சுமார் 80,000 பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply