தேசியநதிகளை இணைக்கும் திட்டத்தை அடுத்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றுவது சாத்திய மாகும் என்று மத்திய அமைச்சர் உமாபாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நதிகள் இணைப்புக்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினர்-செயலராக தேசிய நீர்வள முகமையின் தலைமை இயக்குநர் எஸ். மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தகுழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அதில், மத்திய அமைச்சர் உமா பாரதி பேசும்போது, ''நதிகள் இணைப்பு திட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியன் கனவுத்திட்டமாகும். நதிகளை இணைக்கும் முயற்சிக்கு மத்திய அரசுக்கு மாநிலங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எற்படாதவகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும் என உறுதியளிக்கிறேன்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற எந்த மாநிலத்தையும், அமைப்பு களையும், தனி நபர்களையும் சந்தித்து உதவிகேட்கத் தயாராக உள்ளேன். மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் உத்தேசித்துள்ள 30 நதிகள் இணைப்புத் திட்டங்களும் அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது" என்றார்.

Leave a Reply