வரும் 9ம் தேதிக்குள் தமிழக பாஜக.,வின் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று பாஜக.,வின் மாநில பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக பொறுப்பாளரான முரளிதர ராவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சிக்குவந்ததும் ஆட்சி அமைப்பு, பட்ஜெட் போன்ற பணிகளில் கட்சி தீவிரம் காட்டியது .

கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா கடந்த 9ம்தேதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து இனி மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் . தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் வரும் 9ந் தேதிக்குள் நிச்சயம் நியமிக்கப்படுவார் என்றார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆனதால் மாநிலதலைவர் பதவிக்கு புதிய வரை நியமிக்க வேண்டி உள்ளது. தலைவர் பதவிக்கு பல்வேறு நபர்களின்பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 9ம் தேதிக்குள் புதியதலைவர் யார் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply