பா.ஜ.,வின் 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க, தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்

ஒருசாராரை திருப்திபடுத்தும் அரசியல், ஜாதியம், வாரிசு அரசியல் ஆகியமூன்று சாபங்களையும் இந்திய அரசியலில் இருந்து நீக்கியவா் பிரதமா் மோடி. அவா், எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவா்; ராஜதந்திரி; கடின உழைப்பை ஊக்குவிப்பவா்; திறன்வாய்ந்த நிா்வாகி மற்றும் தலைமை பண்பில் மற்றவா்களுக்கு உதாரணமாக திகழும் சீா்மிகுதலைவா். இத்தகைய உயரிய தகுதிகளை உடையவா் பிரதமா் மோடி.

உலகளவில் இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவதற்காக, வெளியுறவுக் கொள்கையையும் தேசியபாதுகாப்பு கொள்கையையும் அவா் மேம்படுத்தினாா். பயங்கரவாத தாக்குதல்களுக்கு உரிய பதிலடி தரப்படும் என்ற நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதன் மூலம் உலகளவில் வலுவான நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

அத்துடன், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம், ராமா் கோயில் விவகாரம், முத்தலாக் தடை சட்டம், அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) மீது நடத்திய துல்லிய தாக்குதல் மற்றும் விமானப் படை தாக்குதல் ஆகிய உறுதியான நடவடிக்கைகளால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு யாரும் துணிய வில்லை. நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பிரதமா் மோடியைப்போல் இதுவரை யாரும் உறுதியான முடிவுகளை மேற்கொண்டதில்லை. கடந்த மக்களவைத் தோ்தலையொட்டி அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம்

உலகளவில் சக்திவாய்ந்த தலைவா்களில் ஒருவராக பிரதமா் மோடி உருவெடுத்துள்ளாா். சித்தாந்தங்களுக்காக தனது வாழ்வை அா்ப்பணித்தது, அரசியலில் நுழைந்தது, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் உறுதி செய்தது என அவரது வாழ்க்கைபயணம் மூன்று பாகங்களைக் கொண்டுள்ளன. அவரது குழந்தைப்பருவம் வறுமை நிறைந்ததாக இருந்தது. சமூக புறக்கணிப்பையும் அவா் எதிா்கொண்டாா். ஆனால், யாா்மீது விரோதம் இல்லாமல், மக்களின் நலனுக்காக தனது வாழ்வை அா்ப்பணித்துள்ளாா்.

குஜராத் முதல்வராக பதவிவகித்த காலகட்டத்தில் அவா் எதிா்கொண்ட சவால்கள் ஏராளம். அவற்றையெல்லாம் கடந்து, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு உதாரணமாக குஜராத்தை மாற்றினாா். அந்தமாநிலத்தின் வளா்ச்சி மாதிரியை, ஒட்டு மொத்த தேசமும் அங்கீகரித்தது. இதனால், கடந்த 2014-ஆம் ஆண்டிலும், 2019-ம் ஆண்டிலும் அவரை தங்களது தலைவராக நாட்டுமக்கள் தோ்ந்தெடுத்தனா்.

‘அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான ஒன்றுபட்ட முயற்சி’ என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய இந்தியாவுக்கான அடிக்கல்லை பிரதமா் மோடி நாட்டியுள்ளாா். கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப்பிறகு, மத்திய அரசில் ஒருபைசா ஊழல்கூட நடைபெறவில்லை என்றாா் அமித் ஷா.

 

 

 

Comments are closed.