ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா-லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்க்கு , நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . அப்போது, ஜெகன்மோகன் ரெட்டி தனது சொத்து பட்டியளையும் தாக்கல் செய்தார் அதில் தனக்கு 365 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துககள் இருப்பதாகவும், தனது மனைவிக்கு 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் கடந்த 2004ல் நடைபெற்ற தேர்தலில் ராஜசேகரரெட்டி தாக்கல் செய்த சொத்துபட்டியலில், தனது மகனுக்கு சொந்தமாக, 9.18 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஜெகன் அப்போது அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்குள் நுழைந்த குறிப்பிட்ட சில ஆண்டுகளில், தற்போது அவரதுசொத்து மதிப்பு, 365 கோடி ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது.

9.18 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்து எப்படி 365 கோடி ரூபாயாக உயர்ந்தது என்ற ரகசியத்தை மக்களுக்கு விளக்கவேண்டும்

Tags:

Leave a Reply