உங்கள் செல் போனுக்கு +92, #90 (அ) #09 என்ற எண்களில் தொடங்கும் நம்பரிலிருந்து மிஸ்ட்கால் வந்தால் திருப்பி அழைக்கவேண்டாம் என செய்திகள் தெரிவிக்கின்றன .

சிம்கார்டை  குளோன்செய்து அதில் இருக்கும் விவரங்களைப்பெற விஷமிகள் புதியயுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 எனும் எண்களில் தொடங்கும் எண்ணில் இருந்து யார் செல் போனுக்காவது விஷமிகள் மிஸ்ட்கால் கொடுக்கிறார்கள். யாரோ கூப்பிடுகிறார்களே என நினைத்து அந்தநபரும் அந்த எண்ணை தொடர்பு கொண்டால் சிம்கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி, டேட்டா கார்டுகளில் இருக்கும் விவரங்களை விஷமிகள் எடுத்து விடுகின்றனர்.

 எனவே இதை போன்ற எண்களிலிருந்து மிஸ்ட்கால் வந்தால் திரும்பி அழைக்கவேண்டாம். மேலும் செல் போனில் வங்கிகணக்கு எண், பாஸ் வேர்டு போன்றவற்றை பதிவுசெய்து வைக்க வேண்டாம். இதுவரை சுமார் 1 லட்சம்பேர் ஏமாந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Leave a Reply