பாஜக தேசிய செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் சென்னை வந்துள்ளார். அவர் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; கூட்டணியில் 99.5 சதவீதம் பிரச்னைகள் பேசி தீர்க்கப் பட்டுள்ளது. தற்போது, சிறுசிறு பிரச்னைகள் மட்டுமே உள்ளது. அவையும் சுமுகமாக முடியும். கூட்டணிகட்சி தலைவர்களிடம் ஒப்புதல்பெற்று தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஓரிரு தொகுதிகளில் தே.மு.தி.க, பா.ம.க.,வுக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. இது தான் பிரச்னைக்கு காரணம். இதுதொடர்பாக பேசிமுடிவு எடுக்கப்படும். தொகுதிபங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை சென்னைக்கு அழைத்திருந்தோம். நாளை மறுநாள் டெல்லியில் பாஜக தேர்தல்குழு கூட்டம் நடைபெறுகிறது. எனவே ராஜ்நாத் சிங், சென்னைக்கு வரும் தேதி நாளைதான் முடிவாகும். இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.

Leave a Reply