சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் வலை தளத்தில் மோடி தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.
விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கரில் நடைபெறும் தேசிய இளைஞர்தின விழாவில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார்.
முன்னதாக கர்நாடகாவில் சிலதினங்களுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச யோகா ஆராய்ச்சி குறித்த கருத் தரங்கில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பாரம்பரிய அறிவினை உலகிற்கு பறை சாட்டியவர் விவேகானந்தர் என்று புகழாரம் சூட்டினார்.
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் நாள் கொல்கத்தாவில் பிறந்தார். இவர் இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாக கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற் பொழிவுகள் உலகப் புகழ் பெற்றது. நல்ல இளைஞர்கள் நூறுபேரை தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறினார். மேலும் இளைஞர்களுக்கு பல்வேறு கருத்துக்களை விவேகானந்தர் கூறியுள்ளார்.
1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம்முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.