இரண்டு ஆண்டுகளில் அன்னிய நேரடிமுதலீடு, 53 சதவீதம் அதிகரித்துள்ளது

நாட்டில், சுலபமாக தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகளை, தொடர்ந்து மேற்கொண்டதன் விளைவாக, கடந்த இரு ஆண்டுகளில், அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்ட நேரடிமுதலீடு, 53 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ஒரு புதிய சாதனையாகும்.
 

2015-16 நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு குவிந்ததற்கு, மறு சீரமைப்பு நடவடிக்கைகள் முக்கியகாரணமாக அமைந்துள்ளது.  விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், விலைவாசி கட்டுப்பாடு, பட்ஜெட்டுக்கு உட்பட்ட செலவினங்கள், நுண்பொருளாதார ஸ்திரத்தன்மை போன்றவை முதலீட்டுக்கான சூழலை உருவாக்கி யுள்ளன.  முதலீட்டாளர்கள் ஒன்றும் அறக்கட்டளையில் முதலீடு செய்ய வில்லை. அப்படியிருந்தால் லாபத்தை ஈட்டமுடியாது.

யாரும் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். பலன் இருப்பதால்தான் முதலீடு அதிகரித்துள்ளது. தொழில் தொடங்குவதில் எளியநடைமுறையை ஏற்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விலைவாசியை கட்டுப்படுத்தி, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டதன் மூலம், இது சாத்தியமாகியுள்ளது. நிதிச்செலவினங்கள் குறைக்கப்பட்டு, ஸ்திரமான பொருளாதார சூழல் உருவாக்கப் பட்டது. இது, முதலீடுகளுக்கு பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்திதந்துள்ளது.

கடந்த, 1991ல், தாராளமய மாக்கல் கொள்கை அமலுக்கு வந்ததுமுதல், பல துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. அவற்றுடன் மேலும் பலதுறைகளில், அன்னிய நேரடி முதலீடுகளுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பல்வேறு துறைகளில், அன்னியநேரடி முதலீடு சார்ந்த கடுமையான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும், சுலபமாக தொழில் துவங்குவதற்கு வசதியாக, தொழில் உரிமம், மின்இணைப்பு உள்ளிட்டவற்றை, விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அனைத்து நடை முறைகளும், வெளிப்படையான செயல் பாடுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளன.

நாட்டின் பொருளாதாரம் நிலையாக, நீடித்தவளர்ச்சி காண வேண்டும் என்ற கொள்கையுடன், அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், உலகளவில் மிகவேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடுகளில் ஒன்றாக, இந்தியா உயர்ந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதில்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...