2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அப்போதைய குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடியை முன்னிறுத்தி பா.ஜ.க தேர்தலை சந்தித்தது.இதில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதை யடுத்து நரேந்திரமோடி பிரதமரானார்.
இதனால் காலியான முதல்மந்திரி பதவியில் மூத்தமந்திரி ஆனந்திபென் பட்டேல் அமர்த்தப்பட்டார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஆனந்தி பென் படேல் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஆனந்திபென் படேல் “பா.ஜக கொள்கைப்படி 75 வயதுக்குமேல் உள்ளவர்கள் ஆட்சி பதவியில் இருப்பதில்லை. எனக்கு 75 வயது ஆகப்போவதால் நான் முதல்மந்திரி பதவியில் இருந்து விலகுகிறேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சிமேலிடத்திற்கு அனுப்பி விட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அகில இந்திய தலைவர் அமித்ஷாவிடம் கேட்டபோது, ஆனந்திபென் பட்டேல் ராஜினாமா கடிதம்வந்ததை உறுதிசெய்தார். கட்சியின் பாராளுமன்றகுழு கூடி, ஆனந்திபென் படேல் ராஜினாமா சம்பந்தமாக ஆலோசனை நடத்தும். அதைத் தொடர்ந்து அடுத்த முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார்.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.