நரேந்திரமோடி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார்

தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

பிரதமர் நரேந்திரமோடி, வாங் யீ இடையேயான சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனைநடத்தினர். அப்போது சீனாவில் வரும் செப்டம்பர்மாதம் நடைபெற இருக்கும் ஜி-20 அமைப்பின்மாநாடு குறித்து வாங் யீ தெரிவித்தார். இதற்கு சீன அதிபருக்கு தனது வாழ்த்துகளை தெரிவிக்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, சுஷ்மா ஸ்வராஜை வாங் யீ சந்தித்துப்பேசினார். 3 மணிநேரம் வரை நீடித்த இந்தச்சந்திப்பில், என்எஸ்ஜி விவகாரம், மசூத் அஸாத் விவகாரம் ஆகியவற்றை சுஷ்மா ஸ்வராஜ் எழுப்பினார். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா மேற்கொண்டுவரும் பொருளாதார முனைய பணிகளுக்கு இந்தியாவின் கவலையை சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார்.

மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், சீனாவுடன் எத்தகைய தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்தும் பேசத்தயாராக இருப்பதாக வாங்யீயிடம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளில் பல்வேறு அம்சங்கள் குறித்து வெளியுறவுச்செயலர்கள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தும் புதிய நடைமுறையை கடைப்பிடிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தச்சந்திப்பின்போது, தென் சீனக்கடல் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவில்லை. பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு விவகாரங்கள், உலகஅரசியல் நிலவரம் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்தப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும், வெளிப்படையானதாகவும் அமைந்திருந்தது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...