திருப்பூருக்குத் தீர்வைக் கொடுத்த வானதி!

தென்னிந்தியாவின் டாலர் சிட்டி' என அழைக்கப்படும் திருப்பூரில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன சாயப் பட்டறைக் கழிவுகள். ' பொது சுத்திகரிப்பு மையம் அமைத்தால், அதை நம்பியுள்ள தொழிலாளர்களும் பின்னலாடைத் தொழிலும் மேம்பாடு அடையும் என்பதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். 200 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள்' என உற்சாகத்தோடு பேசுகிறார் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.  

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதால், நீர்வளம் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல், மண்வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ' சுமார் 450 சாயப் பட்டறைகள் மட்டுமே 20 பொது சுத்திகரிப்பு மையங்களை அமைத்துள்ளன. மீதமுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக' சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொதிப்படைந்தனர். அதாவது, ' அமிலத்தன்மை கொண்ட சாயக் கழிவுகளைப் பிரிப்பதற்கு நவீன அறிவியல் தொழில்நுட்ப முறைகளில் ரசாயனக் கழிவுகளைப் பிரித்து, கழிவுநீரை ஆற்றில் விட வேண்டும் என்ற விதிமுறைகளை சாயப்பட்டறை உரிமையாளர்கள் கண்டு கொள்வதில்லை' என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்தின் காரணமாக, சாயப்பட்டறைத் தொழில் அதிபர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

' சாயத்தொழிலை நடத்துபவர்கள் மறுசுழற்சித் தொழில்நுட்பத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, ஒரு சொட்டு கழிவுநீரைக்கூட நொய்யல் ஆற்றில் விடக்கூடாது' என 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தது. அதையும், திருப்பூர் சாயப் பட்டறை அதிபர்கள் பின்பற்றாததால், 'நொய்யல் நதி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளாத மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்கிறோம்' என நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்தது. இதன்பிறகுதான், அதிரடியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் விளைவாக இருபதே நாட்களில் அனைத்து சாயப் பட்டறைகளும் சலவை ஆலைகளும் மூடப்பட்டன. மறுசுழற்சி முறையை நடைமுறைப்படுத்தி வருவதாக உறுதியளித்த நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளன. ' மாசு கட்டுப்பாட்டு வாரியமும், கண்காணிப்புக் குழுவும் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தால் நிறுவனங்களைத் திறக்கலாம்' என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், சிறு மற்றும் நடுத்தர சாயப்பட்டறை நடத்துபவர்கள்  தொழிலை நடத்த முடியாமல் நலிவடைந்துள்ளனர். 

"சிறு மற்றும் நடுத்தர சாயப் பட்டறைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த அக்கறை இருக்கிறதா என்ற கேள்வியைக் காட்டிலும், பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு அவர்கள் போதிய நிதி வசதி இல்லாமல் திணறி வந்தனர். பெரு நிறுவனங்களைத் தவிர்த்து, இதர சாயப்பட்டறைகளின் கழிவுநீரை சுத்திகரிக்க, பொது சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்கு, மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னலாடைத் தொழிலின் பிரிக்க முடியாத அங்கமாக சாயத் தொழில் இருக்கிறது. சாயக் கழிவுகளால் பின்னலாடைத் தொழிலுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என விவரித்த தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், தொடர்ந்து நம்மிடம், "சாயப் பட்டறை பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால் திருப்பூரின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி, பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. சிறு உற்பத்தியாளர்கள் துணிகளுக்குச் சாயமேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவுளி பின்னலாடை உற்பத்தியாளர்கள் பலரும் துணிகளுக்கு சாயம் ஏற்றுவதற்காக ஈரோடு, பவானி, பெருந்துறை,சேலம் போன்ற பக்கத்து நகரங்களுக்குச் செல்கின்றனர்.

பெரு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களில் சாயமேற்றுவதற்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனாலும், இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து பலன் கொடுக்குமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. இதனால் ஏற்படும் உற்பத்திச் செலவுகளால் நிலையான தொழில் வளர்ச்சி குறித்த அச்சம் பல தரப்பிலும் எழுந்துள்ளது. பின்னலாடைத் தொழிலே, சாயப்பட்டறைகளை நம்பித்தான் உள்ளது. இதன் காரணமாக, திருப்பூருக்கு வந்து பிழைக்கும் பல லட்சம் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதைப் பற்றி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் நிர்மலா ஸ்மிருதி இரானி கவனத்திற்கு கொண்டு சென்றேன். இதே கோரிக்கையை தமிழக அரசும் முன்வைத்தது. 'ஒரே ஒரு திட்டத்திற்காக 200 கோடியை ஒதுக்குவது சாத்தியமா' என்ற கேள்வி எழுந்தது. இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த கோரிக்கை பற்றி 4 மாதகாலம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். இதையடுத்து, நிதி ஆயோக்கின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காண்ட் அவர்களை கடந்த ஜூலை 22 அன்று மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவியுடன் சந்தித்துக் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக இந்த இரு அமைச்சர்களிடமும் வலியுறுத்தி வந்தோம். அவர்களும் நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, திருப்பூர் பொது சுத்திகரிப்பு திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். இப்படியொரு முயற்சி சாத்தியமாவதற்கு மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காரணமாக இருந்தார்" என நெகிழ்ந்தார்.

சாயப்பட்டறை பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி இடதுசாரி இயக்கங்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு அசைந்து கொடுக்கவில்லை. அரசு நிர்வாகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர், சாயப்பட்டறை பிரச்னைக்குத் தீர்வு கண்டதை ஆச்சரியத்தோடு கவனிக்கிறார்கள் பின்னலாடை உற்பத்தியாளர்கள்.

நன்றி ஜூவி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...