இஸ்ரோ மனித விண்வெளிப் பயணத்தைத் தனது சொந்தமுயற்சியில் விரைவில் நிகழ்த்தும்

இஸ்ரோ தனது அடுத்தகட்ட சாதனையாக மனித விண்வெளிப் பயணத்தைத் தனது சொந்தமுயற்சியில் விரைவில் நிகழ்த்தும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முற்றிலும் தயாரான கனரக ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க் 3 நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது. இந்தச் சரித்திர வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த சாதனைக்கு தயாராகிவருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தனது அடுத்தசாதனை முயற்சியாக மனித விண்வெளிப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துவருகிறது.

உள்நாட்டிலேயே தயார்படுத்தும் வகையில் க்ரியோ ஜெனிக் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக புதிய செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உள்நாட்டிலிருந்தே எவ்வித அயல்நாட்டு உதவியும் இல்லாமல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கவுள்ளது இஸ்ரோ. இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன்நாயர் கூறுகையில், ‘சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் அளிக்காத வகையில் செயற்கைக்கோள் தயாரிக்க பயன்படும் தொழில் நுட்பமே க்ரியோஜெனிக் தொழில்நுட்பம். இதன் மூலமே மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்து வருகிறது. மொத்தத்தில் மீளக்கூடிய, மறுபயன் பாட்டுக்கு வழிவகுக்கக்கூடிய அளவில் செயற்கைக் கோள்களை உருவாக்குவதே இஸ்ரோவின் தற்போதைய தலையாய நோக்கமாகும்’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்து கொள்ளுங்கள்  வினாடி வினாவில் பங்கேற்குமாறு புலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். வினாடி வினா இந்தியாவிற்கும் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துகிறது என்றும், நமது வளமான பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான அற்புதமான வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “நமது வம்சாவளியினருடனான பிணைப்பை வலுப்படுத்துதல்! #BharatKoJaniye வினாடி வினாவில் பங்கேற்க வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகம் மற்றும் பிற நாடுகளின் நண்பர்களை வலியுறுத்துங்கள் இந்த வினாடி வினா இந்தியாவிற்கும் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துகிறது. நமது வளமான பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தை மீண்டும் கண்டறிய இது ஒரு அற்புதமான வழியாகும். வெற்றியாளர்களுக்கு #IncredibleIndia--ன் அற்புதங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.’’

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...