சென்னை, ஐ.ஐ.டி.,யில், கணேசதுதி பாடியதில் தவறு இல்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.சென்னை அருகே, பூந்த மல்லியில் உள்ள, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், எச்.ராஜா, நேற்று சுவாமிதரிசனம் செய்தார்.பின், அவர் கூறியதாவது :இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான், பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்துகோவில் மீட்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.
கோவில் சொத்துக்களை விஞ்ஞான முறையில், அரசு கொள்ளை யடித்து வருகிறது. பூந்தமல்லி, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில், போலிகணக்கு வாயிலாக, பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது. ஊழல்செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும். தமிழகத்தில், கோவில் சொத்துகளை முறையாக வாடகைக்கு விட்டால், ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் வருவாய்கிடைக்கும். இதன்மூலம், கல்வி, மருத்துவம் இலவசமாக கொடுக்கலாம்.
சென்னையில், ஐ.ஐ.டி., என்ற, உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவன விழாவில், கணேசதுதி பாடியதில், என்ன தவறு உள்ளது; இதுகுறித்து கருத்து கூறும் தலைவர்களை கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.