245 இருக்கைகளை கொண்ட பாராளுமன்ற மாநிலங்களவைக்கு பல்வேறு துறைகளைசேர்ந்த பிரபலங்கள் 12 பேர் கவுரவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். மீதி 233 பேர், ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எம்பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 16 மாநிலங்களைச்சேர்ந்த, 58 மாநில உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது.
இதற்கிடையே, 16 மாநிலங்களில் இருந்து 57 புதிய உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு தேர்வுசெய்ய மார்ச் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மேற்கண்ட 57 உறுப்பினர்களை தவிர, கடந்த டிசம்பர் மாதம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமாசெய்த கேரள மாநிலத்தை சேர்ந்த வீரேந்திர குமாரின் இடத்துக்கு மேலும் ஒரு உறுப்பினரை தேர்வுசெய்யவும் இதே நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் கடந்தமாதம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக. நேற்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழுவினர் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் அருண் ஜெட்லியும், மத்தியபிரதேசத்தில் தவார்சந்த் கெலாட்டும், ராஜஸ்தானில் பூபேந்தர் யாதவும், பீகாரில் ரவிசங்கர் பிரசாத்தும், குஜராத்தில் மன்ஷுக் மாண்டவ்யா மற்றும் பர்சோத்தம் ருபாலாவும், இமாச்சலபிரதேசத்தில் கே.பி.நட்டாவும் வேட்பாளர்களாக அறிவிக்க பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.