கர்நாடக தேர்தல் 82 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக

கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 82 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை கட்சி இன்றுவெளியிட்டது.

கர்நாடகா விலுள்ள 224  சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 12-ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முக்கியகட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறிக்கும் முனைப்பிலுள்ள பாஜக, கடந்த 8-ஆம் தேதி 72 வேட்பாளர்கள் அடங்கியபட்டியலை வெளியிட்டது. இதில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள பி.எஸ்.எடியூரப்பா, கட்சியின் மூத்த தலைவர்கள் கேஎஸ்.ஈஸ்வரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில், 82 வேட்பாளர்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை கட்சி இன்று வெளியிட்டது. இத்துடன் சேர்த்து பாஜகசார்பில் போட்டியிடும் 154  வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ்சார்பில் போட்டியிடும் 218  வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியானது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...