* பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்து கணிப்பு…
* 548 பேரிடம் மட்டுமே விசாரித்த கொடுமை
* காங்கிரசின் மற்றொரு நாடகம் அம்பலம்
* ராகுலுக்கு சசிதரூர் கடும் கண்டனம்
பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு ‘சூப்பர் பொய்’ என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 2014 முதல் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சி செய்து வருகிறது. துவககத்தில் மோடி ‘அலை’ வீசியது. பின் அது ‘சுனாமி’யாக மாறி இந்திய £வின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.,யில் பா.ஜ., கூட்டணி 325 இடங்களை கைப்பற்றி சரித்திர சாதனை படைத்தது. தவிர 2014க்கு பின் இந்தியாவில் நடந்து வரும் சட்டசபை மற்றும் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 21 மாநிங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் கூட பா.ஜ., 104 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது.
கடந்த நான்கு வருடங்களில் மோடி ஆட்சியில் ‘ஊழல்’ என்ற பேச்சிற்கே இடமில்லை. தவிர, மோடியின் திடீர் அறிவிப்பான ‘பணஇழப்பு’ மற்றும் ஜி.எஸ்.டி., போன்றவற்றிற்கு துவக்கத்தில் சற்று எதிர்ப்பு இருந்தாலும் பின்னர் அது ‘நாட்டின் வளர்ச்சிக்கே’ என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். ஜி.எஸ்.டி.,யால் பருப்பு உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் இன்று வெகுவாக குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகமாக காணப்பட்டாலும் அதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறவில்லை. இனி ஏறவும் செய்யாது. இதற்கு காரணம் ஜி.எஸ்.டி.,தான்.
ஜி.எஸ்.டி.,யை கடுமையாக எதிர்த்த ‘வாரிசு அரசியல்வாதிகள்’ மற்றும் சில ’தேசதுரோக தலைவர்கள்’ எல்லாம் பெட்ரோல், டீசல் வி¬லையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வந்தால் பெட்ரோல் விலை ரூ.50, டீசல் விலைர ரூ.40 என குறைந்துவிடும் என்கின்றனர். ஆக. இவர்களே ஜி.எஸ்.டி.,யால் விலை குறையும் என்பதை ஒப்புக் கொண்டு விட்டனர். அதோடு ஜி.எஸ்.டி.,யால் மாநில அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் என் ஒரு பொய்யை சொன்னார்கள். ஆனால், ஜி.எஸ.டி.,யால் மாநில அரசுகளுக்கு வருவாய் அதிகரித்து இருப்பதாக பல்வேறு மாநில முதல்வர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
தவிர ஆதார் 99 சதவீதம் அமல்படுத்திய நிலையில், கேஸ் மாண்யம், விவசாய மாண்யம் உள்ளிட்டவைகள் இன்று ஏழை மக்களுக்கு நேரடி பலனை தருகிறது. தவிர, மத்தி அரசின் பல்வேறு திட்டங்கள் இன்று மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், மோடி அரசு மீது, ஊழலோ அல்லது வேறு ஏதாவது காரணமோ சொல்ல முடியாத நிலையில், ராகுல் தலைமையில் காங்கிரஸ் ‘முடியை பிய்த்துக்’ கொண்டு இருக்கிறது. எந்த நேரத்தில் பிரதமர் மோடி, தனது லட்சியம் ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ (காங்கிரஸ் இல்லா இந்தியா) என சொன்னாரோ அன்று முதல் அவரது சொல் (நல்லவர்கள் சொல் என்றுமே பலிக்கும்) பலிக்கத் துவங்கி விட்டது. இன்று, பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில், பா.ஜ.,வை தனித்து நின்று எதிர்த்தால் 40 சீட் கூட தேறாது என்பதை உணர்ந்த காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒறுங்கிணைக்க முடிவு செய்துள்ளது. இருந்தும் சந்திரபாபு நாயுடு, சந்திரசேர் ராவ், மம்மதா, நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்கள் காங்கிரசை நம்ப தயாராக இல்லை. ஏன் சமீபத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட இனி காங்கிரஸ் கட்சியுடுன் கூட்டணி இல்லை என அறிவித்தது. உ.பி.,யில் இனி பா.ஜ., வை தனித்து எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்த அகலேஷ், மாயாவதி (இருகட்சிகளும் பரம எதிரிகள்) இனி சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிட வேண்டும் என்று முடிவை எடுத்துள்ளனர். மோடி மீது அவர்களுக்கு அவ்வளவு பயம்.
இப்படிப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் (போட்டி இல்லாமல் பப்பு வெற்றி பெற்ற முதல் தேர்தல்) ராகுல் காந்தி, தேர்தலை மனதில் கொண்டு பா,.ஜ.,வுக்கு எதிராக குறிப்பாக மோடிக்கு எதிராக ‘தினமும் ஒரு பொய்’ செய்திகளை அவிழ்த்துவிட்டு வருகிறார்ர்,. தமிழகத்தில் சுடாலினைப் போல. ஆனால், இவரது இந்த பொய் கடைசியில் இவரையே தாக்கி அழிக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இரண்டு தினங்களுக்கு முன் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு முடிவை வெளியிட்டது. இதை கையில் எடுத்துக் கொண்ட ராகுல் பா.ஜ., ஆட்சியின் அவலை நிலை இதுதான் என கூவி வந்தார். இவரை நம்பியிருக்கும் அன்னகாவடிகளான கனிமொழி உள்ளிட்ட சிலர் ராகுலைப் போல் பேசத் துவங்கியது காலக் கொடுமை.
இந்த நிலையில், இந்நிலையில், கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு, தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது. அதோடு, இந்த நிறுவனம் பற்றிய செய்திகளை உளவுத்துறை மூலம் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் பல ‘திடுக்’ தகவல்கள் வெளிவந்துள்ளது.
இங்கிலாந்தில் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஐ.நா., சபையில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் பாலியல் தொழிலில் அடிமை, பணிப்பெண் சேவை, பெண் கடத்தல், கட்டாய திருமணம், கல் எறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசு கொலை உள்ளிட்ட நடைமுறைகளில் பெண்களுக்கு அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக முடிவை அறிவித்தது. ஆனால், இது சுத்த பொய் என தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனம் மொத்தம் 548 பேரிடம் மட்டுமே கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. இதில், 500 பேர் வெளிநாட்டவர். 48 பேர் மட்டுமே இந்தியர்கள். இதுவே இவர்களின் கருத்து கணிப்பு லட்சணத்தை வெளிப்படுத்திவிட்டது. அதிலும் 48 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் நகைச்சுவை. தவிர மக்களை நேரவடியாக சந்திக்காமல் ஆன்லைன், தொலைபேசி மூலமாக கருத்துக்கணிப்பை நடத்தியதாக சொல்லப்பட்டுள்ளது. இதிலிருந்தே இவர்களது உண்மைதண்மையை அறிந்து கொள்ளலாம்.
ராகுலின் இந்த பொய் இப்போது காங்கிரஸ் வட்டாரத்திலும் விமர்சனம் செய்ய துவங்கி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சசிதரூர் கூறுகையில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. (இவரது மைண்ட் வாய்ஸ்: கேரளாவில் ஒரு பெண்ணுக்கு எட்டுபேர் பாவமன்னிப்பு கொடுத்த கொடூரம்) ஆனால், பெண்கள் பாதுகாப்பில் பிறநாடுகளை விட இந்திய மிகச் சிறப்பாகவே உள்ளது.
தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முற்றிலும் தவறு. ஆப்கன், சிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியா பின்தங்கியிருப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம். என்றார். ‘முள்ளை முள்ளால்’ எடுக்க வேண்டும் என்பதைப் போல் காங்கிரசின் இந்த குற்றச்சாட்டை அவரது கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பது ராகுலுக்கு பெரிய அவமானமாக அமைந்துள்ளது.
ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியா இருவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். தவிர, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீதான வருமான வரித்துறையின் பிடி இறுகுகிறது. இதனால், ‘தினம் ஒரு பொய்’ என சொல்லி இந்த வழக்குகளில் இருந்து திசைதிருப்ப ராகுல் முயற்சி செய்து வருகிறார். பாவம்… ராகுல்… இவர் தொடர்ந்து ‘சேம் சைடு’ கோல் அடித்து வருவது காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.
நன்றி பரணிவேல் சங்கர்
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.