நீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.

ஒரு லட்சம் தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொன்ற போதும் எழுந்திருக்காத கால்கள் தன் மகளுக்காக துள்ளியோடி டெல்லி சென்று மண்டியிட்ட அரிய வகை மனுநீதிச் சோழன் வசிக்கும் நாடு, எங்கள் தமிழ் நாடு. இங்கே உங்கள் காலடி பட வேண்டாம். போய் விடுங்கள் அமித் ஷா.

வயதான ஆதரவற்ற அனாதைகள், எலும்பும் தோலுமாய் திரிவதைப் பார்த்து, இரக்கம் கொண்டு எலும்பை மட்டும் உருவி விட்டு அவர்களின் ஆவியை பரலோகம் அனுப்பும் கருணை நிலையங்கள் கொண்ட நாடு இன்றைய தமிழ் நாடு. அனாதைகளின் அலறல் கேட்ட போதும் சில்லறைச் சத்தம் தேடிச் சென்ற "செயல் தலைவர்கள்" நிறைந்த நாடு எங்கள் தமிழ் நாடு. இங்கே உங்கள் கால்கள் பட வேண்டாம் அமித் ஷா ஜி.

நீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா ஜி

30 40 வருடங்களாக காவேரியில் தண்ணீர் வரவில்லை, எலிக்கறி சாப்பிடுகிறோம் என்று கூவி கூவி அழுதோம். ஆனால் இதோ 4 வருடத்தில் பிரச்சினை தீர்ந்தது. என்ன பிரயோசனம்? இனி நாற்று நட்டு கதிரறுத்து சமையல் செய்து சாப்பிடவேண்டும். ஏன் தமிழர்களை வதைக்கிறீர்கள்? இதோ பிரியாணி இலவசமாய் கிடைக்கிறது சில வஹாபியர்கள் புண்ணியத்தில். எனவே…

நீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.

இந்தியனை திராவிடன், ஆரியன் என்று பிரித்து வேற்றுமை பார்ப்போம். ஆப்ரஹாமிய மதங்கள் என்றால் வாய் பொத்தி அடிமை வாழ்வு வாழ்வோம். இவையெல்லாம் எங்கள் உரிமை.

எங்கள் சொந்த சகோதரி இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் கழுத்தறுப்பட்ட போதும், "நீங்க பண்ணுங்க பாய்" என்று எங்கள் மதச் சார்பற்ற நிலையை பறை சாற்றினோமே? கேட்கவில்லையா உங்களுக்கு இந்தச் செய்தியெல்லாம்?

நீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.

"நாம் தமிழர்" என்று ஒரு மலையாளீ நடித்தால் isuzu கிடைக்கும்.

"எங்க ஊரு பக்கம் வாடி" என்று மோடியை ஏசினால் BMW கிடைக்கும். என்ன குறை எங்களுக்கு?

எங்களுக்கு துரோகம் பழகி விட்டது அமித் ஷா.

அது எங்கள் பிட்டத்தில் வந்த சிரங்கு போல். அதை சொரியும் பொது வரும் சுகம் அலாதியானது. அதைக் கெடுக்க வேண்டாம்.

நீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.

திரும்பிப் போய் விடுங்கள்!

நன்றி ச. சண்முகநாதன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...