இந்த கிறிஸ்டி நிறுவனம் எப்படி மாட்டிச்சுன்னு கேட்கிறதுக்கு முன்னாடி ஒரு சிறு ஃப்ளாஷ் பேக்.
மோடி டீ மானிட்டைசேஷன் அறிவித்தவுடன் இந்த காங்கிரஸும் இங்குள்ளவர்களும் பொங்கி மோடியை திட்டித்தீர்த்தார்கள்.
டீ மானிட்டைசேஷனால் கருப்புப்பணம் எங்கே வெளியில் வந்தது என்றெல்லாம் ஏகவசனத்தில் திட்டு. சாதாரண மக்கள்தான் கஷ்டப்பட்டார்க ளென்றெல்லாம் வசவு, ஊடகங்களின் விவாத மேடையிலெல்லாம் இதேகதைதான்.
நான் அன்றும் ஒரு பதிவு இட்டிருந்தேன். இதனால் சாதாரண மக்கள் கஷ்டப்பட்டது உண்மை தான். ஆனால் அது தற்காலிகமானது. கொஞ்சம் பொறுங்கள் பழைய நோட்டுக்கள் டெபாஸிட்செய்த அக்கவுண்ட்களெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றாக வெளிவருமென்று. உடனே இதெல்லாம் சும்மா சப்பைக்கட்டென்று எனது சில நண்பர்களே கூறினார்கள். ஆனால் கடந்த சிலமாதங்களாக நாட்டில் பல்வேறு இடங்களில் பல நிறுவனங்களில் வருமானத்துறைகள் ஆய்வு நடத்தி பலமோசடிகள் வெளிச்சத்துக்கு வந்து கொப்டிருக்கின்றன.
சரி இங்கு கிறிஸ்டி நிறுவனத்துக்கு வருவோம். வருமானத்துறைக்கு திருச்சங்கோட்டிலுள்ள ஒரு தேசிய மயக்காமாக்கப்பட்ட வங்கியில் ரூ300 கோடிக்குமேல் மாற்றப்பட்டது தெரிந்தது. உடனே ரகசியவிசாரணை நடந்ததில் இந்த கிறிஸ்டி குழுமத்தின் வேலை செய்பவர்கள் மூலம் தலா 10000 வீதம் 300 கோடிக்கு மாற்றியது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் விளைவுதான் இந்த ரெய்ட். இப்போது இதன் மூலம் பல ஆயிரம் கோடிகள் கணக்கில் காட்டாமலும், வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்கியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் நான் இவர்களைக்கேட்டுக்கொள்வது என்னவென்றால் எதற்கும் அவசரப்படாமல் காத்திருந்து, அந்த காரியங்கள் நடக்கவில்லையென்றால், கருத்துக்களை பதிவிடலாமே!
இந்த 300 கோடி பழைய நோட்டுகளை மாற்றியவிவகாரத்தை எந்த ஊடகமும் விவாத மேடைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஏனென்றால் இது டீ மானிட்டைசேஷனுக்கு கிடைத்த வெற்றி.மத்திய அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியென்பதால் அதை பாராட்ட தயாராக இல்லை.
நன்றி சிவபுகழ்
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.