பஞ்சாப் நேஷனல்வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடிசெய்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் வைர வியாபாரி நீரவ்மோடியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள ஹோட்டலில் பேசி கொண்டிருந்ததை தாம் பார்த்ததாக சமூக ஆர்வலர் ஷெஜாத் புனாவாலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் வியாழக் கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று, தில்லி ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் நீரவ்மோடியை சந்தித்து பேசியதை மறுக்க முடியுமா? என்று ராகுல் காந்திக்கு நான் சவால் விடுக்கிறேன். அந்த ஹோட்டலில் ராகுல் நீண்டநேரம் இருந்தார்.
அந்த காலக்கட்டத்தில்தான், நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோருக்கு கடன்கள் அளிக்கப்பட்டன. சிறப்பு பாதுகாப்பு படையினரிடம் இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கலாம் அல்லது உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தலாமா?
குரான் மீது ஆணையிட்டு இதை நான்தெரிவிக்கிறேன். நான் தெரிவிப்பது உண்மை என்பதை நிரூபிக்க உண்மைக் கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன் என்று அந்தப்பதிவுகளில் புனாவாலா குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இதே தகவலை புனாவாலா மீண்டும் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், நான் தெரிவிப்பதை பொய் என நிரூபித்தால், அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கிறேன்' என்றார்.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.