அயோத்தி துணை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ். அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது தொடர்பான வழக்கின் துணைவழக்காக, தொடர்ப்பட்ட மனு ஒன்றில் மசூதிக்கு சென்று தொழுகைசெய்தல் இஸ்லாமிய வழிபாட்டுமுறையா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்கவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தவழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி பூஷன் மற்றும் நீதிபதி அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிவிசாரிக்க அவசியமில்லை என தெரிவித்திருக்கிறது.
வரும் அக்டோபர் 29ஆம் தேதி இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத்தீர்ப்பை வரவேற்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.