இந்து மத நிகழ்ச்சி ஒன்றை இந்துகோவிலில் நடத்த ஏன் அனுமதி வழங்க வில்லை. இனி தஞ்சை பெரியகோவிலில் தியான நிகழ்ச்சி நடத்த நினைக்க மாட்டேன். அந்த எண்ணத்தை விட்டு விட்டேன். நாங்கள் காவிரி மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டு இருக்கிறோம். தஞ்சை மக்கள் நாங்கள் இங்கு கூட்டம் நடத்த வேண்டும் என்று நினைத் தார்கள். மக்களின் விருப்பம் அதுதான்.
கோவிலில் கூட்டம் நடத்தவேண்டும் என்று அவர்கள்தான் விரும்பினார்கள். அதனால்தான் இங்கு வந்தோம். ஆனால் அனுமதி கிடைக்க வில்லை. இங்கு எந்தவிதமான பாரம்பரிய கலை பொருட்களையும் அழிக்க வில்லை. தொல் பொருட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. நாங்கள் பாதுகாப்பாகத் தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். தவறான செய்திகளை பரப்பவேண்டாம்.
நாங்கள் எல்லா அனுமதியும் பெற்றுத் தான் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டோம். ஆனால் ஏன் நிகழ்ச்சிக்கு தடைவிதித்தார்கள் என்று தெரியவில்லை. இந்து கோவில் ஒன்றில் இந்துமதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது ஆச்சர்யாமாக இருக்கிறது. தொல்பொருள் துறையின் அனுமதி இருந்தும் கூட தடை விதித்தது ஆச்சர்யம் அளிக்கிறது,
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சார்பில் தஞ்சாவூர் பெரியகோவிலில் தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்காக மண்டபங்கள் போடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மதுரை ஹைகோர்ட் கிளையில் இந்து மத விரோதிகளால் வழக்குதொடுக்கப் பட்டது.
இந்த வழக்கில், தியான நிகழ்ச்சிக்கு தடைவிதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அங்குதான் இருக்கிறார்கள். இதனால் கண்டிப்பாக நிகழ்ச்சி அங்குநடக்கும் என்று தகவல்கள் வந்தது. மறுத்தார் இந்த நிலையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்த செய்திகளுக்கு மறுப்புதெரிவித்து அளித்த பேட்டி.
You must be logged in to post a comment.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
3therefore