பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நிகழ்த்திய துல்லியத்தாக்குதல் குறித்து பாகிஸ்தானைப் போலவே, காங்கிரஸூம் கேள்வி எழுப்புகிறது என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினார்.
மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-சிவசேனை கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அந்தக்கூட்டணியின் முதல் பிரசாரக்கூட்டம் கோலாப்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஃபட்னவீஸ் பேசியதாவது:
பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நிகழ்த்திய தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானைப் போலவே, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றன.
மும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு கண்டனம் மட்டுமே தெரிவித்தது. ஆனால், உரிதாக்குதலுக்குப் பிறகு பாஜக தலைமையிலான மத்திய அரசு துல்லியத்தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அதிகமக்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்களின் மூலம் ரூ.80,000 கோடியானது, பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் எனது ஆட்சியுடன், தங்களது 15 ஆண்டுகால ஆட்சியை ஒப்பிட்டுப் பார்க்குமாறு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு சவால் விடுகிறேன் என்று ஃபட்னவீஸ் பேசினார்.
பிரசாரக் கூட்டத்தில், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தனது அரசியல் வாழ்வு முழுவதுமாக மகாராஷ்டிரத்தை மேம்படுத்தாமல் சிதைத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் எங்களை எதிர்த்துப் போட்டியிட, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என்றே தெரிய வில்லை.
அக்கட்சிகளில் இருந்து பெரும் பாலானவர்கள் வெளியேறி வருகின்றனர். இந்தநிலை நீடித்தால் சரத்பவார் பாஜகவில் வந்து இணையும் நிலை ஏற்படலாம். ஆனால், பாஜக அவரை ஏற்றுக் கொள்ளாது என்று நம்புகிறேன் என்று உத்தவ் தாக்கரே பேசினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 25, சிவசேனை 23 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.