மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறிநீடிக்கும் நிலையில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தசிக்கலும் இல்லை என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. எனினும் பாஜக க்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக, இம்முறை முதலமைச்சர் பதவியை வழங்கவேண்டும் என சிவசேனா பிடிவாதமாக தெரிவித்துவருகிறது.
குறிப்பாக சுழற்சி முறையில், இருகட்சிகளும் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை பங்கீட்டுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சிவசேனா முன்வைத்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா ஒப்புதல் தெரிவிக்காததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், தங்களுக்கு 15 சுயேச்சைகள் ஆதரவுஇருப்பதால், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தமுரண்பாடும் எழாது என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
<
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |