இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான எஸ்.டி.பி.ஐக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை!…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை தூண்டி விட்டு நாடெங்கும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றன. கேரளாவிலும் இதுபோன்ற ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் இத்தகைய ஆர்பாட்டங்களில் அதிகளவில் வன்முறை சம்பவங்கள் நடப்பதால் கேரளாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் இன்று சட்டசபையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் சி.ஏ.ஏ வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியாக முன்னெடுக்கப் படும் நிலையில் இஸ்லாமிய தீவிரவாதஇயக்கமான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) போராட்டங்களில் வன்முறையை தூண்டி நடத்திவருகிறது. இதை எங்களால் ஏற்க முடியாது.
இதுவரை அமைதியான போராட்டக் காரர்கள் மீது நாங்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. ஆனால் எஸ்.டி.பி.ஐ மீது நிறைய வன்முறை குற்றசாட்டுகள் வருகின்றன. அவர்கள் வகுப்பு ஒற்றுமையை சிதைத்து வருகின்றனர். அந்த இயக்கத்தை சேர்ந்த 200 ஆர்பாட்டக்காரர்களை கைதுசெய்யக் கோரி மாநிலம் முழுவதும் வலியுறுத்தி வருகின்றனர்.
இனி நாங்கள் பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம், நடவடிக்கை எடுப்போம் என்றார். அப்போது காங்கிரஸ் காரர்கள் எஸ்.டி.பி.ஐ க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அப்போது முதல்வர் தீவிரவாதிகளுக்கும், வன்முறையை தூண்டுபவர்களுக்கும் நீங்கள் ஆதரவாளர்களா? என கேள்வி எழுப்பினார்.
2018 ல் இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவரான அபிமன்யு கொலை செய்யப்பட்டார். பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவை ஒழிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளிவந்த பின்னர் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜே.சி.மதுசாமி இந்த அமைப்பு குறித்து கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
2019 ல் இந்த தீவிரவாத அமைப்பினால் கேரளகாங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு காங்கிரஸ், தீவிரவாத இயக்கங்களான எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ உடன் தொடர்பு வைத்துள்ளதாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் கேரள சிபிஐஎம் தலைவர் தாமஸ் இசாக் ஏற்கனவே ஒருமுறை பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ போன்ற தீவிரவாத மத அமைப்புகளை “சமூகபுறக்கணிப்பு” செய்ய அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது