மேக் இன் இந்தியா திட்டம், இந்தியாவுக்கானது மட்டுமல்ல , அது உலகிற்கானது

பாதுகாப்புத்துறை கண்காட்சியை துவக்கிவைத்துள்ள பிரதமர் மோடி, மேக்இன் இந்தியாதிட்டம், இந்தியாவுக்கானது மட்டுமல்ல என்றும், அது உலகிற்கானது என பெருமிதம் தெரிவித்துள்ளார். 

உத்திர பிரதேசத்தின் லக்னோவில், 11ஆவது பாதுகாப்புத் துறை கண்காட்சி தொடங்கியுள்ளது. வருகிற 9ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்த பாதுகாப்புக் கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

பாதுகாப்புக் கண்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டம், இந்தியாவுக்கானது மட்டுமல்ல , அது பன்னாட்டு சமூகத்திற்கானது என்றார். அடுத்த 5 ஆண்டுகளில், 25 வகையான ராணுவ தளவாடங்களை, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தயாரிப்பதே, இந்திய அரசின் இலக்கு என  குறிப்பிட்டார்.

21ஆம் நூற்றாண்டு டிஜிட்டல் யூகத்திற்கான என்பதால், அதற்கேற்ற தொழில் நுட்பங்களை கொண்ட தளவாடங்கள் காலத்தின் கட்டாயம் என்றார்.. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், கடந்த 5 ஆண்டுகளில், பீரங்கிகள் உள்ளிட்ட திறன் மிக்க ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 35 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதிசெய்ய இலக்கு வைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்கிடும் வகையில், 200 பாதுகாப்புத் தளவாட ஸ்டார்-அப் நிறுவனங்களை ஏற்படுத்திட இலக்கு வைத்திருப்பதாகவும், பிரதமர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புக் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், ராணுவ வீரரின் சைகைக்கு ஏற்ப, கை-கால்களை அசைக்கும், இயங்கும் ரோபோவை கண்டு ரசித்து, அதனுடன் கைகுலுக்கினார்.

இதையடுத்து, துப்பாக்கிகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்த ஸ்டால்களை பார்வையிட்ட பிரதமர், இலக்கை காட்சிப்படுத்தி, எளிதாக குறிவைக்க உதவும், அதிநவீன இயந்திர துப்பாக்கியை இயக்கிபார்த்தார்.

“இந்தியா வளர்ந்துவரும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம்” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் லக்னோ பாதுகாப்பு கண்காட்சியில், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 70 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 172 ராணுவத்தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. டிஆர்டிஓ((DRDO)) உட்பட 856 இந்திய நிறுவனங்களும், தங்கள் ராணுவத் தளவாடங்களை காட்சிப்படுத்தி யிருக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...