இந்து சமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல

இந்துசமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல; எனவே, பாரதீய ஜனதாவை எதிர்ப்பதென்பது இந்துக்களை எதிர்ப்ப தாகாது என்றுள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பைய்யாஜி.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பேசியுள்ளவர் இந்தக்கருத்தை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுரேஷ் பைய்யாஜி தெரிவித்துள்ளதாவது, “இந்துசமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல. எனவே, பாரதீயஜனதாவை எதிர்ப்போர் இந்து சமூகத்தை எதிர்ப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

அரசியல்போராட்டம் தொடரும். ஆனால், அதை இந்துக்களோடு இணைத்துப் பார்க்கக்கூடாது. குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அதை, அரசியலமைப்பு விதியின் படி மாநில அரசுகள் நடைமுறை படுத்துவது அவசியம்.

குடியுரிமைப் பிரச்சினை என்பது மத்திய அரசு தொடர்பானதே ஒழிய, மாநிலஅரசுகள் சம்பந்தப்பட்டதல்ல. மாநில அரசுகள் தங்களுக்குரிய அதிகாரங்களின் அடிப்படையிலேயே சட்டங்களை இயற்றிக் கொள்ள முடியும்.

இந்தியாவில் பணியாற்ற விரும்பும் எவரும், இந்துக்களோடு ஒத்திசைந்து, அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றவேண்டும். நினைவிற்கெட்டாத காலம் முதல், இந்தியாவின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்துக்கள் சாட்சியாக இருந்துவருகின்றனர். எனவே, இந்த நாட்டிலிருந்து இந்துக்களைப் பிரிக்கமுடியாது.

இந்துக்கள் வகுப்புவாதிகளோ அல்லது வன்முறையாளர்களோ அல்ல என்பதால், யாரும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயங்க வேண்டியதில்லை” என்றுள்ளார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...