டெல்லி சட்ட சபை தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைவர்களில் ஒரு சிலரால் வெறுக்கத்தக்க பேச்சு முன்வைக்கப் பட்டது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.
இதுபோன்ற உரைகள் தேர்தலில் கட்சியின் வாய்ப்புகளை பாதிக்கக் கூடும் என்று ‘டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2020’ நிகழ்ச்சியில் பேசியவர் ஒப்புக் கொண்டார். “ஷாஹீன்பாக் போராளிகள், உங்கள் மனைவிகள் மற்றும் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என்று பாஜக தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய வில்லை. ஆனால், துரோகிகளை சுடுங்கள், இது இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டி என்றெல்லாம் சிலர் பிரச்சாரம் செய்தனர். அப்படி செய்திருக்ககூடாது. எங்கள் கட்சி உடனடியாக இதுபோன்ற பிரச்சாரத்திற்கு பொறுப்பே ஏற்கமுடியாது.
“இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள் கட்சியின் பார்வை அல்ல. ஆனால் இந்தபேச்சு காரணமாக நாங்களும் தேர்தலில் பின்னடவை சந்தித்திருக்க கூடும். வாக்காளர்கள் ஏன் பாஜகவுக்கு வாக்களிக்க வில்லை, என்பது சரியாக தெரியவில்லை. ஏனெனில் வாக்காளர்கள் யாரும் காரணத்தை எழுதி தருவதில்லை. ஆனால் சர்ச்சை பேச்சுக்களும் ஒருகாரணமாக இருந்திருக்கலாம், ” என்று அமித்ஷா, கூறினார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |