நரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற்கும் சார்க் நாடுகள்

கொரோனா வைரஸை எதிர் கொள்ள வலிமையான  செயல் திட்டம் வகுக்க சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்பதாக பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.

உலகநாடுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போராடிவருகின்றன. இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளிலும் வெளிநாட்டில் இருந்துவந்தவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவிவருகிறது.

இந்நிலையில் 8 தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் (SAARC) நாடுகளின் தலைவர்கள் கொரோனாவை எதிர் கொள்ள வலிமையான செயல்திட்டத்தை ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். அதுகுறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த சார்க்நாடுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று டுவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.

அவர் அழைப்பு விடுத்த சிலமணி நேரங்களில் இலங்கை மற்றும் மாலத்தீவு  அழைப்பை ஏற்பதாக அறிவித்தன.அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசும் வீடியோ கான்பிரஸ் மூலமாக கொரோனா குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்பதாக இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஆயிஷா ஃபரூக்கி

‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சார்க்நாடுகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசிக்க பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு சுகாதாரத்துறை செயலாளர் ஜஃபார் மிர்ஸா தயாராக உள்ளார் என ஆயிஷா ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...