கரோனா அச்சுறுத்தல் ஆா்எஸ்எஸ் வருடாந்திர கூட்டம் ரத்து

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, ஆா்எஸ்எஸ் அமைப்பின் தேசியளவிலான பிரதிநிதிகளின் வருடாந்திர கூட்டம் ரத்து செய்யபட்டுள்ளது.

ஆா்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய முடிவுகளை தேசிய அளவிலான பிரதிநிதிகளின் வருடாந்திர கூட்டத்தின் போது எடுப்பது வழக்கம். நிகழாண்டு அந்தக்கூட்டம் கா்நாடக தலைநகா் பெங்களூரில் ஞாயிற்றுக் கிழமை முதல் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இதில் ஆா்எஸ்எஸ் அமைப்பை சோ்ந்த சுமாா் 1,500 முழுநேர ஊழியா்கள், நிா்வாகிகள் கலந்துகொள்ளவிருந்தனா்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலா் சுரேஷ் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா வைரஸ் பரவலின் தீவிரம் கருதியும், அதுதொடா்பாக மத்திய-மாநில அரசுகள் வெளியிட்ட அறிவுறுத்தல்களின் பேரிலும் பெங்களூரில் நடைபெறவிருந்த அகில பாரத பிரதிநிதிகளின் கூட்டம் ரத்துசெய்யப் படுகிறது. கரோனா வைரஸ் சவாலை வெற்றிகரமாக எதிா்கொள்ளவும் அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் அரசு நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில பாரத பிரதிநிதிகளின் கூட்டத்தில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் கிளை அமைப்புகளான விசுவஹிந்து பரிஷத், தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூா் சங்கம், மாணவா் அமைப்பான அகிலபாரதிய வித்யாா்த்தி பரிஷத் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்க விருந்தனா். பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் ஆகியோா் உரையாற்றவிருந்தனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...