கல்வானில் நடந்தது, சீனாவால் முன்னரே திட்டமிடப்பட்டது

லடாக்கின் கல்வான் பகுதியில் சீனாவின் தாக்குதலால் இருதரப்பு உறவுகளே பாதிக்கப் படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயிடம், தொலைபேசியில் பேசியபோது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

லடாக்கின் கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்தியவீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததpனர். சீனதரப்பில் 43 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இரு நட்டை சேர்ந்த அமைச்சர்கள் தொலை பேசியில் பேசி கொள்வது இதுதான் முதல் முறையாகும்.

தொலைபேசியில் பேசிய, வாங் யீ ” எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கோபமூட்டும் வகையில், எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என ராணுவத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற மோதல் மீண்டும் நடைபெறாததை இந்தியா உறுதி செய்ய வேண்டும். தற்போதையசூழலை இந்தியா தவறாக கணிக்கக்கூடாது. அந்தபகுதியின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற சீனாவின் உறுதியை குறைத்து மதிப்பிடக்கூடாது” என தெரிவித்தார்.

ஜெய்சங்கர் பேசியது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கல்வானில் நடந்தது, சீனாவால்முன்னரே திட்டமிடப்பட்டது. இதற்கான பின்விளைவுகளுக்கு அந்நாடே பொறுப்பேற்க வேண்டும். இந்தநிகழ்வுகள், இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் சீனா தனது நடவடிக்கையை ஆய்வுசெய்து ஆய்வு செய்வதுடன், சரியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஜூன் 6 ம் தேதி, இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் முடிவை இரு தரப்பினரும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்த வேண்டும்.

இருதரப்பு ஒப்பந்தங்களை இரு நாட்டு ராணுவங்களும் கடைபிடிக்கவேண்டும். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை முறையாக மதிக்கவேண்டும். தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்ட முடிவை புரிந்துகொண்டு, சூழ்நிலையை பொறுப்பான முறையில் கையாள வேண்டும். இருதரப்பு ஒப்பந்தப்படி அமைதியை சீர்குலைக்கவும், பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருநாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

ஏற்கெனவே உயர்மட்டளவில் மேற்கொண்ட உடன்படிக்கையை சீனா கடைப்பிடித்திருந்தால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...