காஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை

காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்டதலைவர் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்ல ப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்களது வீட்டுக்கு அருகில் நடத்திவரும் சொந்த கடை ஒன்றில் இவர்கள் மூவரும் நேற்று மாலை இருந்தபோது இந்ததாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரியை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டதாக காஷ்மீர் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வாசிம் பாரி, அவரது தந்தை பஷீர்அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் காயமடைந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட மூவரும் துரதிருஷ்வடமாக இறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திரமோதி விசாரித்ததாகவும், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலக அதிகாரி ஜிதேந்திர சிங் நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

காஷ்மீரில் தேசிய வாதத்தின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்ததாக்குதல் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜகவின் ஜம்மு, காஷ்மீருக்கான செய்திதொடர்பாளரான அனில் குப்தா, “இதுபோன்ற தாக்குதல்கள் காஷ்மீரில் எங்களது குரலை மட்டுப் படுத்தாது. கடந்த மூன்றாண்டுகளாக வாசிம் பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்துவந்தார். மிகவும் சுறுசுறுப்பான தொண்டரான அவர், சமூகசேவைகளையும் செய்து வந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்தபோது நாங்கள் அதிர்ந்து விட்டோம். தங்களுக்கு சொந்தமான கடையில் அவர்கள் இருந்தபோது, அங்குவந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர்” என்று அவர் தெரிவித்தார்.

“இது காஷ்மீரில் தேசியவாதகுரலை அடக்குவதற்கான தெளிவான செய்தி. ஒரு மாதத்திற்கு முன்புதான், ஒருபயங்கரவாத அமைப்பு பாஜக தொண்டர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, “இது கட்சிக்கு மிகபெரிய இழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்; முழு கட்சியும் துயரமடைந்த குடும்பத்துடன் நிற்கிறது. அவர்களின் தியாகம்வீணாகாது என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற அரசியல் கட்சிகளும் இந்தசம்பவத்தை ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கண்டித்துள்ளன.

“பாஜக தொண்டர் மற்றும் அவரது தந்தைமீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். துயரத்தில் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல்வாதிகள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்துவருவது வருத்தமளிக்கிறது” என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உயிரிழந்த பாஜக தலைவரின் எட்டுபாதுகாப்பு காவலர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில், தாக்குதல் நடந்த நேரத்தில் இறந்தவர்களுடன் பாதுகாப்பு காவலர்கள் யாரும்இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தாக்குதல் தொடுத்தவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...