நீர்வழிப் போக்குவரத்துக்கு தயார்: நிதின் கட்கரி

பிரம்மபுத்ரா நதியில் தூர்வாரும்பணி நிறைவடைந்துள்ளதால் இனிமேல் நீர்வழி போக்குவரத்து மேற்கொள்ளப்பட முடியும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை, சிறு குறு நடுத்தரதொழில் துறை, ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சாலை பாதுகாப்பு திட்டத்தை தொடங்கிவைத்தார். பதிமூன்று நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். காணொலி மாநாடு மூலமாக நடைபெற்ற இந்தமெய்நிகர் நிகழ்ச்சிக்கு, மாநில முதல்வர் என் பிரேன் சிங் தலைமை வகித்தார்.

வட கிழக்கு மண்டலப் பகுதியின் வளர்ச்சி பிரதமர் அலுவலகம் ஆகிய துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைகளுக்கான மத்தியஇணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி கே சிங், மணிப்பூர் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த திட்டங்கள் 316 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகளில் 3,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணிகள் செய்வது தொடர்பானவையாகும்.

மணிப்பூரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இந்தச்சாலைகள், வடகிழக்கு மாநிலத்தில் மேலும் எளியமுறையில் தொடர்பு கிடைக்கவும், வசதியை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.நிகழ்ச்சியில்பேசிய கட்கரி, வடகிழக்குப் பகுதியில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் ஆசைக்கேற்ப, வடகிழக்கு மண்டலப் பகுதியில் பலதிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார். விரைவில் மேலும் பலபுதிய திட்டங்கள் மணிப்பூரில் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மணிப்பூரில் உள்ள இம்பாலில் உயரமான சாலையை அமைப்பதற்கான டிபிஆர் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், இன்னும் இரண்டுமூன்று மாதங்களில் இந்தத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
மாநிலத்தில் சாலைத்திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளையும், பயன் பாட்டு மாற்று வழிகளையும் உடனடியாகத் துவக்க வேண்டும் என்று மாநில முதல்வரை கட்கரி கேட்டுக்கொண்டார். மத்திய சாலை நிதியம் குறித்துப் பேசிய அவர், மாநிலத்திலிருந்து பயன்பாட்டு சான்றிதழ் பெறப்பட்டவுடன், கூடுதலாக ரூ.250 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பிரம்மபுத்ரா, பாரக் நதிகளில் தூர்வாரும்பணி நிறைவடைந்து விட்டது என்று அமைச்சர் தெரிவித்தார். இதனால் நீர் வழி மூலமாக, மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட முடியும் என்று அமைச்சர் கூறினார். இந்த நதிவழியில் சுமார் 50 அல்லது 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, இம்பாலையும் இணைக்கலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். இதனால், மாநில பொருளாதாரம் மேலும் அதிக பயனடையும் என்று அவர் கூறினார்.

வடகிழக்கு மண்டலத்தில் பொது போக்குவரத்துக்கு மாற்று எரிசக்தி பொருட்களைப் பயன் படுத்தலாம் என்றும், இத்தகைய எரிபொருட்கள் மலிவான விலையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்றும் அமைச்சர்கூறினார்.
மணிப்பூரில் வேலை வாய்ப்பு, பொருளாதார சூழலை மேம்படுத்த சிறுகுறு நடுத்தர தொழில் துறைபிரிவு ஆற்றும் பங்கு மிக முக்கியமானது என்று.கட்கரி கூறினார்.

சிறு குறு நடுத்தர தொழில்துறை பிரிவுகளுக்கான வரையறைகள் மாற்றியமைக்க பட்டது குறித்துதெரிவித்த அமைச்சர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கைவினைப் பொருட்கள், கைத்தறிப்பொருட்கள், தேன், மூங்கில் பொருட்கள் போன்றவற்றில் உள்ள ஏற்றுமதித் திறன் குறித்து கண்டறியுமாறு மாநில முதல்வரை அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...