தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை மு.க.ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்;சுப்பிரமணிய சுவாமி.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோயில்களில் 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தின்படி பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், அரசின் இந்தநடவடிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “திமுகதலைவர் ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையேதான் முதல்வராக ஆகி இருக்கிறார். திக ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை, அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார். சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார் ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அந்தப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் தலையிட்டேன். ‘சட்டரீதியில் நடவடிக்கை எடுப்பேன், ஆட்சியை கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்.

இப்பொழுது திடீரென, திக சொன்னதைகேட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கி இருக்கிறார்.

திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதைபோற்றி மகிழ்கின்றனர். ’51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் முக.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார்’ என்று, திகவினர் சொல்லி மகிழ்கின்றனர்.

இந்திய அரசியல் சட்டத்தின்படிதான் இந்து அறநிலைய சட்டம் – 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55-ன் படி, அறநிலையத் துறை கோயில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்குதான் அதிகாரம் உள்ளது.

கோயிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே இருக்கிறது. அப்படி இருக்கும் போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது..? சட்டம் மிகதெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை மு.க.ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். முதல்வர் என்பதால் அவர் இஷ்டத்துக்கு செய்யமுடியாது.

இப்படித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் என்பது பல நுாற்றாண்டுகளாக தீட்சிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கெனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்சநீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல்கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்சநீதிமன்றம் வரை செல்வேன்.

ஆகவே, இந்த உத்தரவை உடனடியாக முதல்வர் முக.ஸ்டாலின் வாபஸ்பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர் களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை மு.க.ஸ்டாலின் மதிக்காமல், இந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே போராடுகிறேன்.

இதை புரிந்து கொண்டு, மு.க.ஸ்டாலின் வாபஸ்பெற்றால் நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்” என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...