செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை

ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க விமானப்படையின் அலாஸ்காவில் உள்ள ஈல்சன் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட சிவப்பு கொடி 2024 பயிற்சியில் இந்திய விமானப்படை  குழு பங்கேற்றது. இது  செங்கொடி 2024 இன் இரண்டாவது பதிப்பாகும், இது ஒரு மேம்பட்ட வான்வழி போர்  பயிற்சியாகும். இது அமெரிக்க விமானப்படையால் ஒரு வருடத்தில் நான்கு முறை நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை, சிங்கப்பூர் குடியரசு விமானப்படை, இங்கிலாந்தின் ராயல் விமானப்படை, ராயல் நெதர்லாந்து விமானப்படை, ஜெர்மன் லுஃப்ட்வாஃபே மற்றும் அமெரிக்க விமானப்படை (யுஎஸ்ஏஎஃப்) ஆகியவை பங்கேற்றன.

ரஃபேல் விமானம் மற்றும் விமான குழுவினர், தொழில்நுட்பவல்லுநர்கள், பொறியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் அடங்கிய பணியாளர்களுடன் இந்திய விமானப்படையின் படைப்பிரிவு பங்கேற்றது

செங்கொடி என்பது யதார்த்தமான போர் அமைப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்ட பல வகைகளில் நடத்தப்படும் ஒரு வான் போர் பயிற்சியாகும். விரும்பிய சூழலை உருவகப்படுத்துவதற்காக படைகளின் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, சிவப்புபடை வான் பாதுகாப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது.  நீலப்படை தாக்குதல் கலப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது..

IAF இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் செங்கொடி பயிற்சியில்  பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். சவாலான வானிலை மற்றும் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை இருந்தபோதிலும், ஐ.ஏ.எஃப் பராமரிப்பு குழுவினர் பயிற்சியின் காலம் முழுவதும் அனைத்து விமானங்களின் சேவைத்திறனை உறுதி செய்ய விடாமுயற்சியுடன் பணியாற்றினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...