கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L முருகன் பேட்டி

விவசாயிகள் கவுரவ நிதி மூலம் அவர்களின் கண்ணியத்தை காக்கும் அரசாக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நெல்லியில், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியின் 17-வது தவணையை விடுவிக்கும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் (ஸ்பிரேயர்), நேரடி நெல் விதைப்பு இயந்திரங்கள், தேனி வளர்ப்பு பெட்டிகள் ஆகிய வற்றையும் அமைச்சர் எல் முருகன் வழங்கினார். மேலும் விவசாய துணை விரிவாக்க பெண் பணியாளர்களுக்கான (வேளாண் தோழி) சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகள் அமைத்திருந்த இயற்கை விவசாய பொருட்கள் கண்காட்சி அரங்குகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின்பு நடைபெறும் முதல் நிகழ்ச்சி விவசாயிகளின் மேம்பாட்டுக்கானது என்றார். இன்று பிரதமர் விடுவித்துள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, நாட்டிலுள்ள 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை நேரடியாக சென்றடையும்  என்றும், இந்த நிதி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், அவர்கள் விவசாய இடுபொருட்களுக்காக கடன் வாங்குவதை குறைக்கும் என்றும் அமைச்சர் கூறினார். மத்திய அரசு நாட்டில் உள்ள நான்கு பிரிவினர் குறிப்பாக மகளிர், விவசாயிகள், இளைஞர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தரம் உயர்த்தி விற்பதன் மூலம் அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் ட்ரோன் சகோதரிகள் திட்டத்தின் மூலம் நாட்டில் மூன்று லட்சம் பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக பயிற்சியளித்து விவசாய பணிகளில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களை இயக்குபவர்களாக உருவாக்கி அவர்களுக்கு அதிகாரமளிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். மேலும் நியாயவிலை கடைகளில் சிறு தானியங்களை விற்க தகுந்த முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் சிறுதானியங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சி பாஸ்கர பாண்டியன்,  திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி வி சுரேஷ், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் எஸ் ரமேஷ் மற்றும் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜய் நீஹர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...